Wednesday, August 12, 2015

செயற்களத்தில் முதன்மைப்படுத்த வேண்டியவை



மனிதன் என்பவன் இயங்கு தன்மை கொண்டவன். இயங்குதல் அல்லது செயற்படுதல் அல்லது அசைதல் என்பது மனித இயல்போடு இசைவாக்கம் அடைந்த ஒன்று. இயக்கத்தைம் அல்லது செயற்பாட்டையும் மனிதனையும் பிரிக்க எடுத்த முயற்சிகள் வரலாற்றில் தோல்வியையே சந்தித்துள்ளது. இஸ்லாமிய உலகில் சூபித்துவ வரலாறும் , ஏனைய மதங்கள், கோட்பாடுகள் “துறவரவாழ்வூ” என்ற சிந்தனையும் இதனையே சுட்டுகின்றது.


எனவே தான் மனிதனாகப் பிறந்தவன் செயற்பட்டுத்தான் ஆக வேண்டும். பல கட்டங்களில் தன் அசைவை வெளிப்படுத்தித் தான் தீர வேண்டும் என்பது இயற்கை நியதிகளில் ஒன்றாக மாறி விட்டது. இதன் காரணமாவே இயக்கமற்று இயல்பிலேயே முடமாகப் பிறக்கும் பிறவிகளை மனிதன் புனிதமாகப் பார்க்கிறான். சுமையாக கருதுகிறான். அவைகளை இயங்கு தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபடுகின்றான்.


எனவேதான் காலத்துக்குக் காலம் மனித செயற்பாடுகளை தீர்மானித்தல் அல்லது வரையறைசெய்தல் அல்லது நெறிப்படுத்தல் என்ற பெயரில் புதுப்புது சிந்தனைகளும் சித்தார்த்தங்களும் தோற்றம் பெறுகின்றன. இந்த அடிப்படையில் தான் இஸ்லாமும் இந்த உண்மையை சமூகத்திற்கு சொல்வதில் பின்வாங்கவில்லை. ஏனென்றால் இஸ்லாம் மனித இயல்போடு உறவாடும் மார்க்கம், இயற்கை நியதிகளை (சடத்துவ பாசையில்) இறைநியதிகளை (இஸ்லாமிய பாசையில்) பலப்படுத்தி சீரான வாழ்வை இவ்வூலகில் உருவாக்க வந்த மார்க்கம். இஸ்லாம் மனிதனின் செயற்பாடுகளை வரையறுப்பதில், ஒழுங்குபடுத்துவதில், தீர்மானிப்பதில், நெறிபடுத்துவதில் ஏனைய கோட்பாடுகள், சிந்தனைகளை விட பல விடயங்களில் சிறப்புப்பெற்றதாகக் காணப்படுகின்றது.

மனித செயற்பாடுகளை உருவாக்கும் 2 முக்கிய காரணிகளை உளவியல்  உலகம் இன்று அடையாளப்படுத்துகின்றது.

1.சீரிய சிந்தனை(பகுத்தறிவு)
2.தூய மனநிலை

மனித செயற்பாடுகளை உருவாக்கும் இவ்விரு காரணிகளும் இஸ்லாம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது என்பதனை القرآن ,السنة ,نصوص களை ஆராய்ந்து பார்க்கின்றவர்களுக்கு தௌிவாகப் புரிந்து கொள்ளலாம். எந்தளவுக்கென்றால் இஸ்லாமிய ஷரீஆ வரையறை செய்யூம் செயற்பாடுகள் அல்லாஹ்விடம் பெறுமானம் மிக்கதாக அங்கீகரிக்கப்பட கூடியதாக அமைய வேண்டுமென்றால் அச்செயற்பாடுகளில் கட்டாயம் இவ்விரு நிபந்தனைகளும் பிரதிபளிக்க வேண்டும் என இஸ்லாமிய ஷரீஆ எதிர்ப்பார்க்கின்றது.القرآن இன் إقرأ என்ற  ஆரம்ப வசனம் மனிதனின் சிந்தனையை சீரானதாக மாற்றுவதற்கு அல்குர்ஆன் எடுக்கும் முயற்சியாகும். அறிவில்லாமல் செய்யும் செயற்பாடுகளை விட அறிவோடு தௌிவோடு செய்யும் செயற்பாடுகள் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது என இமாம் இப்னுல் கய்யூம் கூறியிருப்பது இந்த உண்மையையே சுட்டிக்காட்டுகிறது. இதன் தாற்பரியத்தையே அல்லாஹ் மிகவும் இலகுவாக தனது திருமறையில்  إنما يخشى الله من عباده العلماء எனக் கூறுகிறான்.

 إنما الأعمال بالنيات என்ற பல ஹதீஸ் கிரந்தங்களில் முதலாவதாகவே பதியப்பட்டுள்ள இரண்டு ஹதீஸ்களும் إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم என்ற இறைத்தூதரின் வார்த்தையும் செயற்பாடுகளை உருவாக்கும் மற்றைய காரணியான தூய மனோநிலை என்ற காரணியின் மீதான இஸ்லாமிய ஷரீஆவின்  கவனக்குவிப்பை நன்கு தௌிவுபடுத்துகின்றன.

இயங்கு தன்மை கொண்ட மனிதனின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் இயங்குதன்மையை உருவாக்கும் காரணிகளையே செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனையாக அமைத்து வைப்பதிலிருந்தே ஏனைய கொள்கைகளை , சிந்தனைகளை விடவும் இஸ்லாமிய ஷரீஆவின் சிறப்பம்சத்தை விளங்கிக்கொள்ளலாம்.

இவை அனைத்தையும் விடவும் இன்னொரு சிறப்பம்சம் மனித இயங்குதன்மையை தீர்மானிப்பதில் இஸ்லாமிய ஷரீஆவுக்கு உண்டு. “மனிதன் இயங்குதன்மை கொண்டவன் என்ற மனித இயல்புகளை இஸ்லாமிய ஷரீஆ ஏற்றுக் கொண்டது மாத்திரம் அல்ல இயங்கு தன்மையை தீர்மானிக்கும் காரணிகளை செயற்பாடுகளுக்கு நிபந்தனையாக இட்டது மாத்திரம் அல்ல, வெற்றியைத் தேடித்தரும் பல நல்ல செயற்பாடுகளை அடையாளப்படுத்தியது மாத்திரம் அல்ல, தோல்வியை விளைவாக தரும் செயற்பாடுகளை எச்சரித்து இவற்றுக்கான தண்டனை முறைமைகளை அடையாளப்படுத்தியது மாத்திரம் அல்ல, செயற்பாடுகளுக்கிடையிலான தராதர வேறுபாட்டையும் எச் சந்தர்ப்பத்தில் எவ்வேலையை செய்ய வேண்டும் என்ற வழிக்காட்டலையும், அவைகளை தீர்மானிக்கும் அளவவுகோல்களையயும், மிகத் தௌிவாகவும், துள்ளியமாகவும், இலகுவாகவும் இஸ்லாமிய ஷரீஆ அடையாளப்படுத்தி வைத்திருப்பது இஸ்லாமிய ஷரீஆவின் தனித்துவத்துக்கு மிகப்பெரிய சான்றாகும். செயற்கலத்தில் எதனை முற்படுத்த வேண்டும் எதனை பிற்படுத்த வேண்டும் என்ற இஸ்லாமிய ஷரீஆவின் பல அளவுகோள்களில் மிக முக்கியமான அளவுகோள்களை ஆராய்வதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும்.

செயற்களத்தில் பல்வேறு பகுதிகளில் மனிதன் தனது இயங்குதன்மையை வெளிப்படுத்துகிறான். அது பொருளியல் என்ற செயற்களமாவும் இருக்கலாம். அரசியல்இகல்வி, சமூகவியல், என்ற செயற்களங்களாகவும் இருக்கலாம். ஏன் குடும்பம் என்ற செயற்களமும், தஃவா என்ற செயற்களமும் இதுவல்லாத இன்னும் பல செயற்களங்களாகவும் இருக்கலாம். இஸ்லாமிய ஷரீஆ மனிதனிடம் எதிர்ப்பார்ப்பது இவ் எல்லாக் களங்களிலும் அல்லாஹ்வினதும் தூதரினதும் ஏவல்களுக்கும் , விலக்கல்களுக்கம் ஏற்ப தனது சிறிய நடத்தையை சரியான வழிமுறைகளைப் பிரயோகித்து வெளிப்படுத்துவதாகும். பொதுவாக அறிஞர்கள், பாமரர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் தெரிந்துவைத்திருக்கின் ஓர் எதிர்ப்பார்க்கையே இது என கூறினாலும் அது மிகையாகாது. ஆனால் இந்த எதிர்ப்பார்க்கையை விட அதாவது மனித செயற்பாடுகளுக்குப் பின்னால் இஸ்லாமிய ஷரீஆ எதிர்பார்க்கும் இன்னொரு எதிர்ப்பார்க்கை  இருக்கின்றது. பலருக்கு அந்த எதிர்ப்பாரக்கை எது என்று தெரியாமலிருப்பது கவலைப்படக்கூடிய ஒரு விடயமாக இருந்தாலும் இன்னும் சிலர் அந்த எதிர்ப்பார்க்கையை அறிந்து வைத்தும் பொடுபோக்காக இருப்பது கைசேதப்பட வேண்டிய விடமாகும்.

ஒவ்வொரு செயற்களத்திலும் (பொருளியல், அரசியல், குடும்பம், கல்வி) இஸ்லாமிய ஷரீஆ அடையாளப்படுத்திய பலநற்செயற்பாடுகளும் பொருத்தமான சரியான பெருமானமான பிரயோசனமும் கூடிய செயற்பாடுகளையே அடியான் செய்ய வேண்டும் என்பதுவே இயங்கு தன்மை கொண்ட மனிதனின் செயற்பாடுகளுக்குப்பின்னால் அல்லாஹ் எதிர்பார்க்கும் அடுத்து மிக முக்கிய இரண்டாவது எதிபார்க்கை என அடையாளப்படுத்தலாம்.
எனவே இந்த இரண்டாவது எதிபார்க்கையின் முதன்மைபட்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் பற்றிய அறிவு என்ற பிக்ஹுல் அவ்லவிய்யாத் ஐ ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் அச்செயற்பாட்டிற்குரிய பெருமானத்தைக் கொடுத்து காலத்திற்கும் குறித்த அந்த செயற்பாட்டை செய்யும் மனிதனதும் இயல்புக்கும் நிலைமைக்கும் ஏற்ப எதனை முற்படுத்த வேண்டும் என்பதனை சொல்லித்தரும் ஒரு கலையே பிக்ஹுல் அவ்லவிய்யாத் என சுருக்கமகக் கூறலாம். கலாநிதி யூசுப் அல் கர்ழாவியின் பரிபாஷையில் சொன்னால் பிக்ஹூல் அவ்லவலிய்யாத் எனக்கூறலாம்.  (தொடரும்)

Husni Hanifa (6th Year)

No comments:

Post a Comment