Sunday, September 13, 2015

செயற்களத்தில் முதன்மைப்படுத்த வேண்டியவைகள் (தொடர் 2)


செயற்களத்தில் முதன்மைப்படுத்த வேண்டியவைகள் என்ற இந்த ஆக்கத் தொடரில் கடந்தவாரம்
செயற்படுதல்,அல்லது இயங்குதல் என்ற பண்பு மனித இயல்பில் எந்தளவு தூரம் பொதிந்துள்ளது என்பதையும்,செயற்பாடுகளை தீர்மானிக்கும் அல்லது உருவாக்கும் 2 முக்கிய காரணிகளான சிறிய சிந்தனை,தூய மனநிலை போன்றவற்றுடன் இஸ்லாமிய ஷரீஆவுக்கு இருக்கின்ற தொடர்பையும் ,அவ்விரண்டு காரணிகளிலும்  இஸ்லாமிய ஷரீஆ எந்தளவு தூரம் கவனம் செலுத்தியுள்ளது என்பதையும்,விரிவாக நோக்கினோம்.

எனவே அந்த அடிப்படையில் இயங்குதன்மை கொண்ட மனிதனுக்கு எப்படி இயங்க வேண்டும்?  எச்செயற்பாடுகளை செய்யவேண்டும்?  தனது செயற்பாடுகளை தனது இயல்புக்கும், உலக நியதிக்கும் ஏற்ப எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்,என்ற விவகாரங்களை இஸ்லாமிய ஷரீஆ எந்தவித சந்தேகமோ,தெளிவின்மையோ இன்றிதெளிவாகவும் அழகாகவும் மனித வரையரைக்குட்பட்ட அறிவாற்றலினால் புரிந்துகொள்ள கூடியவகையில் வழிகாட்டுவதோடு மாத்திரம் இஸ்லாமிய ஷரீஆ மனித இயங்குதன்மைக்கான தனது வழிகாட்டலை சுருக்கிக் கொள்ளவில்லை.

Tuesday, September 01, 2015

தலைமைத்துவம் இஸ்லாமிய கண்ணோட்டமும் அரசியல் தலைமைகளும்.

இஸ்லாம் என்பது கட்டுப்படலின் அடிப்படையில் அமைந்த மார்க்கமாகும். எவனிடத்தில் கட்டுப்பாடு இல்லையோ அவன் முஸ்லிமாக இருக்க முடியாது. அவ்வளவு தூரம் கட்டுப்பாடு இஸ்லாத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது.

அல்லாஹுத்தஆலாவுக்கும் அதன் பின் அவனது தூதருக்கும் அதன் பின் அதிகாரிக்கும் (தலைவருக்கும்) கட்டுப்பட்டு நடங்கள் என்று ஏவியுள்ளதை நாம் அறிவோம். ஒழுங்கும், கட்டுப்பாடுமே,  தலைமைத்துவம், முகாமைத்துவம் என்று  இன்று ஒரு விஞ்ஞானமாகவே வளர்ச்சி கண்டுள்ளது.

இஸ்லாம் பல வகையிலும் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் மார்க்கமாகவும் அதனை பல இடங்களில் பேசுகின்ற மார்க்கமாகவும் இருக்கின்றது. தலைமைத்துவத்தை இஸ்லாம் எவ்வாறு நோக்குகின்றது என்பதற்கு முன்னராக தலைமைத்துவம் என்றால் என்ன? என்று வரைவிலக்கணப்படுத்துகின்றது என்பதை அறிவது அவசியம். அடுத்தவர்களின் துணையுடன்  இலக்குகளை அறிந்து கொள்ளல், மக்களை ஒரு குறிப்பிட்ட துறையில் நகர்த்திச் செல்வது, குறிப்பிட்ட  இலக்கிற்காக இயங்குகின்ற மக்களை உறுவாக்குதல் என்று பலவாறு கூறப்படினும், வழுக்கட்டாயமற்ற வழக்குகளைக் கொண்டு செயலாற்றுவதற்காக ஒரு குழுவைத் தூண்டி திட்டமிடப்பட்ட திசையில் வழிநடத்திச் செல்லும் நடவடிக்கையே தலைமைத்துவம் என்று கலாநிதி ஹிஸாம் அத்தாலிப் கொடுக்கும் விளக்கம் இதற்கு உகந்ததாக அமையும்.

Thursday, August 13, 2015

வைராக்கியம்

வைராக்கியம்

வாழ்கையில்
ஒருதடவை தான் வரும்
மாற்றம் - அப்போது
மாறிக்கொண்டால் தான்

வாழ்கையில்
ஒரு தடவை தான் வரும்
சந்தர்ப்பம் - அப்போது
சாதித்துக்கொண்டால் தான்

வாழ்வில்
ஒரு தடவை தான் வரும்
வைராக்கியம் - அப்போது
உறுதி கொண்டால் தான்

Wednesday, August 12, 2015

வண்ணம் எதனால்?


நிதமான நிகழ்வுகள்
நிறைந்திட்ட காலமதில்
தினமும் நிஜமாய்க்  
காணலாம் - நிலையான
வெற்றிகளை – வாழ்வில்
வளமான வண்ணங்களை

நண்பர்களே வாருங்கள்
உண்மைகளை தேடிடவே
வாய் சொல்லும்
செவி சொல்லும் - என்றும்
வீணான வம்புகளே

Our Facebook Fan Page

செயற்களத்தில் முதன்மைப்படுத்த வேண்டியவை



மனிதன் என்பவன் இயங்கு தன்மை கொண்டவன். இயங்குதல் அல்லது செயற்படுதல் அல்லது அசைதல் என்பது மனித இயல்போடு இசைவாக்கம் அடைந்த ஒன்று. இயக்கத்தைம் அல்லது செயற்பாட்டையும் மனிதனையும் பிரிக்க எடுத்த முயற்சிகள் வரலாற்றில் தோல்வியையே சந்தித்துள்ளது. இஸ்லாமிய உலகில் சூபித்துவ வரலாறும் , ஏனைய மதங்கள், கோட்பாடுகள் “துறவரவாழ்வூ” என்ற சிந்தனையும் இதனையே சுட்டுகின்றது.


எனவே தான் மனிதனாகப் பிறந்தவன் செயற்பட்டுத்தான் ஆக வேண்டும். பல கட்டங்களில் தன் அசைவை வெளிப்படுத்தித் தான் தீர வேண்டும் என்பது இயற்கை நியதிகளில் ஒன்றாக மாறி விட்டது. இதன் காரணமாவே இயக்கமற்று இயல்பிலேயே முடமாகப் பிறக்கும் பிறவிகளை மனிதன் புனிதமாகப் பார்க்கிறான். சுமையாக கருதுகிறான். அவைகளை இயங்கு தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபடுகின்றான்.

Thursday, October 04, 2012

Dr. Zuhayli (Biography)

Dr. Zuhayli was born in the Syrian town of Dair Atiah, north of Damascus, to a father who was a farmer by occupation. Zuhayli studied sharia in the University of Damascus for six years, graduating in 1952 at the top of his class.
Zuhayli furthered his Islamic education at the prestigious Al-Azhar University where he again graduated at the top of his class in 1956. After graduating in 1956, Dr. Zuhayli also received an ijaza in teaching Arabic from Al-Azhar.

While studying in al-Azhar, Dr. Zuhayli studied law in Ain Shams University in Cairo, Egypt where he received a bachelors degree magna cum laude in 1957. In 1959, he received a masters degree in law from Cairo University's College of Law. In 1963, he received his doctorate with honors in law with a major in Islamic sharia, his thesis was "The Influences of War on Islamic Jurisprudence: A comparative study including the eight schools of Islamic law and secular international law."